Latestஉலகம்

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: மகிந்த ராஜபக்ச பிரதமாரானார்!

கொழும்பு, அக் 27-இலங்கையில் இலங்கை சுதந்திரா கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த பிர்பரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதிய கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றியது.

ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. அத்துடன் சமீபத்தில் இந்தியாவின் “ரா” உளவு அமைப்பு தன்னைக் கொலை செய்ய முயன்றதாக அதிபர் மைத்ரிமாலா சிரிசேனா பேசியது இரு நாடுகளிடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அதனை இலங்கை அரசு மறுத்தது.

இதன் காரணமாக மைத்ரிபாலா சிரிசேனா வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தருணத்தில் வெள்ளியன்று ஆளும் கூட்டணியிலிருந்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக் கட்சி வெளியேறுவதாகக் கூறி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டது.

இதனால் உண்டான குழப்பமான அரசியல் சூழ்நிலையின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிக்கே பதவி நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker