Latestமலேசியா

ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகரிப்பு! -ஜாக்கிம் எச்சரிக்கை

கோலாலம்பூர். அக்.29- நாட்டில் ஓரினத் தொடர்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய மேம்பாடுத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2013ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1லட்சத்து 73ஆயிரமாக இருந்தது. தற்போது 3 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்று உள்துறை அமைச்சின் புள்ளி விபரம் கூறுகிறது.

இந்த ஓரினத் தொடர்பாளர்களின் விகிதம் மொத்த மக்கள் தொகையில் 2 விழுக்காடு என்றும் இந்த 2 விழுக்காட்டில் 70 முதல் 80 விழுக்காடு மலாய் சமுதாயத்தினர் என்றும் மதிப்பிடப்படுகிறது என்று ஜாக்கிமின் குடும்ப, சமூக மேம்ப்பாடுத் துறையின் துணை இயக்குனர் டாக்டர் முகம்மட் இஷ்வான் தெரிவித்தார்.

அண்மையில் இந்த ஓரினத் தொடர்பாளர்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்களைத் தாம் கோரி இருந்ததாகவும் அதன்படி இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரம் என்றும் அவர் சொன்னார்.

இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் ஆண் ஓரின விரும்பிகள் ஆவர். அதேவேளையில் பெண் ஓரினத் தொடர்பாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து மதிப்பிடுவது கடினமாக உள்ளது என்று டாக்டர் இஷ்வான் கூறினார்.

இத்தகைய ஓரினத் தொடர்பு என்பது மலேசியாவில் அவமரியாதையான செயல் என்றே கருதப்படுகின்றது. ஒரே பாலினத்திற்கு இடையிலான உறவுகள், மலேசியாவில் ஓரு குற்றமாகும். சட்டத்திற்குப் புறம்பான ஆண்களின் ஓரினப் புணர்ச்சி, அதிக அளைவில் சிறைச் சாலைகளிலும் தங்கிப் படிக்கும் பள்ளிகளிலும் இடம்பெறுகின்றன.

மாணவர்கள் மட்டுமே தங்கிப் படிக்கும் பள்ளிகளில், பார்ப்பதற்கு கொஞ்சம் அழகான தோற்றம் கொண்ட புதுமுக மாணவர்களை சீனியர் மாணவர்கள் குறிவைப்பது பொதுவாக நிகழ்ந்ந்து வருகிறது.

அதேவேளையில் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களிடையே தற்காலிக ஓரினத் தொடர்பு உருவாவது குறித்து ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பதின்ம வயது பெண்களிடையே இந்த ஓரினக் கவர்ச்சி என்பது மன உணர்வுகளின் தாக்கத்தினால் ஏற்படுகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்ஆர் தேர்வுக்கு பிந்திய கலந்துரையாடல்களின் போது அந்த மாணவர்களிடம் ஆரம்பப்பள்ளி வாழ்க்கை முடிந்து முதலாம் படிவம் செல்லும் நிலையில் அங்கு ஒருவருக்கொருவர் தொட்டுப் பேசும் போது, அது எந்த வகையில் இருக்க வேண்டும் மற்றும் எவ்வாறு இருக்கக் கூடாது என்பது பற்றி அவர்களுக்கு விளக்கப் படவேண்டும் என்று டாக்டர் முகம்மட் இஷவான் வலியுறுத்தினார்.

மேலும் தங்கிப் படிக்கும் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பும் பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக, அதிகம் பேசக் கூடிய பிள்ளைகள் மவுனமாக இருந்தாலோ அல்லது அந்தப் பள்ளியில் இருந்து தன்னை மாற்றும்படி கேட்டாலோ பெற்றோர்கள் என்ன நடந்தது என்பதை பிள்ளைகளிடம் கேட்டு அறிய முற்பட வேண்டும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker