Latestஉலகம்

லெய்ஸ்டர் உரிமையாளர் ஶ்ரீவதனப் பிரபா மரணம்! ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

லண்டன், அக்.29- லெய்ஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பின் அரங்கத்திற்கு வெளியே நேற்று முன்தின இரவு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், லெய்ஸ்டர் சிட்டி கிளப்பின் உரிமையாளரும் தாய்லாந்து கோடீஸ்வரருமான விச்சாய் ஶ்ரீவதனப் பிரபா, விமானி மற்றும் துணை விமானி உள்பட ஐவர் உயிரிழந்த சம்பவம், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியது.

லெய்ஸ்டர் சிட்டிக் குழுவுக்கும் வெஸ்ட்ஹாம் குழுவுக்கும் இடையே கிங் பவர் அரங்கத்தில் நடந்த ஆட்டம் 1-1-இல் சமநிலை கண்ட பின்னர், அந்த ஆட்டத்தைக் காண வந்திருந்த லெய்ஸ்டர் உரிமையாளர் ஶ்ரீவதனப் பிரபா, அரங்கின் கார் நிறுத்துமிடத்தில் இருந்து தமது ஹெலிகாப்டரில் புறப்பட்ட போது இந்த விபத்து நடந்தது.

வானத்தில் சுமார் 200 அடி உயரத்திற்கு கிளம்பிய ஹெலிகாப்டர் பலமுறை சுழன்று வட்டமடித்த பின்னர் கான்கிரீட் சுவற்றில் மோதி வெடித்து தீப் பந்தாக மாறியதாக கூறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஶ்ரீவதனப் பிரபாவுடன் அவரது விமானி எரிக் ஸ்வாஃபர், மற்றும் துணை விமானியான இஷபெல்லா லெக்கோவிட்ஜ், மற்றும் இரு உதவியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

கோடீஸ்வரர் ஶ்ரீ வதனப் பிரபாவின் உதவியாளராக தாய்லாந்தின் முன்னாள் உலக அழகியான நுர்சாரா சுக்மனாய் மற்றும் கெவேபொர்ன் என்ற நபரும் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் வானத்தில் கிளம்பியதும் கோளாறு ஏற்பட்ட நிலையில் அது அரங்கில் கால்பந்து ரசிகர்கள் திரண்டிருக்கும் பகுதிக்கு சென்று விபத்துக்குள்ளாகி பலரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் தவிர்க்கும் பொருட்டு, கடின முயற்சி எடுத்து ஹெலிகாப்டர் கார்நிறுத்துமிடப் பகுதியிலேயே விபத்துக் குள்ளாவதை விமானி எரிக் உறுதிப்படுத்தினார் என்று தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, பல நூற்றுக் கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றிய அந்த விமானி,உண்மையில் ஒரு ‘ஹீரோ’ என ஊடகங்கள் வர்ணித்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் லெய்ஸ்டர் சிட்டி ரசிகர்கள் தொடர்ந்து மலர்க் கொத்துக்களை வைத்து தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மிகச் சாதாரண நிலையில் இருந்த லெய்ஸ்டர் சிட்டி குழுவுக்கு உரிமையாளராக ஶ்ரீ வதனப்பிரபா பொறுப்பேற்ற பின்னர் பிரிமியர் லீக் சாம்பியனான அதிசயம் நிகழ்ந்தது. மேலும் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிமியர் லீக்கில் நிலைபெற்று விளையாடி வருவதால் லெய்ஸ்டர் சிட்டி ரசிகர்கள் ஶ்ரீவதனப் பிரபா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker