Latestமலேசியா

வேறொரு பெண்ணுடன் தொடர்பா? மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை!

கினாபாத்தாஙான், அக்.29- தனக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து தன்னிடம் சண்டை போட்டதால் கடும் கோபத்திற்கு இலக்கான ஆடவன் ஒருவன் தனது மனைவியை பாராங் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.

இச்சம்பவம் லஹாட் டத்து, பிந்தாசான் தோட்டத்தில் நேற்று காலை 8 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் வரவேற்பு அறையில் கிடந்திருக்கிறார். ஆட்களைப் பார்த்ததும் கொலை செய்த ஆடவன் ஓட்டம் பிடித்திருக்கிறான். தோட்டத்து பாதுகாவலர்கள் அவனை துரத்தி பிடிக்க முயற்சித்தும் அவன் தப்பித்து விட்டான்.

எனினும் போலீசார் பின்னர் அவனை கையும் களவுமாக பிடித்து விட்டதாக கினாபாத்தாஙான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.ஷாஹாக் ரஹ்மாட் தெரிவித்தார்.

அந்தத் தம்பதி இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் செம்பனைத் தோட்டத்தில் வேலை செய்து வந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker