Latestவிளையாட்டு

அதிகார துஷ்பிரயோகம்: USM பேராசிரியர் மீது 9 குற்றச்சாட்டுகள்!

பட்டர்வெர்த்,அக்.30- பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு பல பொருட்களை விநியோகிக்கும் குத்தகை வாய்ப்பை தனது தம்பிக்கு அளித்ததாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

2011-லிருந்து 2012-ஆம் ஆண்டு வரை அவர் இந்த குற்றத்தை புரிந்ததாக நீதிபதி நிஸாம் ஸாக்காரியா முன்னிலையில் 9 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவற்றை 53 வயது படாரூடின் முகமட் மறுத்தார்.

முதல் ஏழு குற்றச்சாட்டுகளில், அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொடர்பு வியூக அலுவலக இயக்குநருமான படாரூடின் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 793 ரிங்கிட் பெறுமானமுள்ள பல்வேறான பொருட்களை விநியோகிக்கும் குத்தகையை தனது தம்பி முஸ்தாபா கமாலின் எம்.கே உரூஸ்நியாகா நிறுவனத்திற்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதியில் இருந்து 2012-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி வரை அவர் இந்த குற்றத்தை புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இரு குற்றச்சாட்டுகளில், அப்பல்கலைக்கழகத்தில் தான் வகித்த மற்றோரு பதவி அதிகாரத்தை பயன்படுத்தி தனது தம்பியின் நிறுவனத்திலிருந்து மூவாயிரத்து 450 ரிங்கிட் பெறுமானமுள்ள நினைவுச்சின்னங்களையும், தனது அலுவலகத்திற்கு ஈராயிரத்து 920 ரிங்கிட் மதிப்பிலான பயோமெட்ரிக்சையும் வாங்கியுள்ளார். இந்த குற்றத்தை அவர் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதியும், 2012-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதியும் செய்திருக்கிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் ரிங்கிட்டும் விதிக்கப்படலாம்.

படாரூடினை 24 ஆயிரத்து 500 ரிங்கிட் ஜாமின் தொகையிலும், நான்கு பேரின் உத்தரவாதத்தின் பேரிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 29-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker