Latestவாழ்க்கை

காற்று தூய்மைக் கேடு; ஒரே ஆண்டில் 6 லட்சம் குழந்தைகள் பலி!

பெர்ன். அக். 30- காற்று மாசுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் பலியானதாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில் அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகம் முழுவதும் காற்று, நீர் போன்றவற்றில் மாசுபாடு தற்போதைய மனித வாழ்வை அச்சுறுத்தும் மிகப் பெரிய ஒன்றாக இருக்கிறது.

இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டின் அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் இந்தியாவில் கூட, வரும் தீபாவளியில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து, ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உடல் நலம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் காற்றில் கலந்துள்ள நஞ்சை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. காற்று மாசுபாடு குழந்தைகள் இறப்புக்கான மிக முக்கிய பிரச்சனையாக இருப்பதாகவும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 10-இல் 1 குழந்தைக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்பதாகவும் அறிவிக்கப்பட்ட்டது.

இந்த ஆய்வில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறினால் உயிரிழந்து உள்ளதாக அக்கருத்தரங்கில் அறிக்கை வெளியிடப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker