Latestமலேசியா

ஏழைகளுக்கான சுகாதார காப்புறுதி திட்டம்; கூடிய விரைவில் அமலுக்கு வரும்!

கோலாலம்பூர், அக்.31- வறுமைக் கோட்டின் கீழ் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களுக்கான அரசாங்கத்தின் சுகாதார காப்புறுதி திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என்றும், அந்தக் காப்புறுதி திட்டத்திற்கான முழுச் செலவையும், ஒருங்கிணைந்த நிதி வாயிலாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமட் தெரிவித்துக் கொண்டார்.

“இதன் தொடர்பில் தனியார் ஏஜென்சி ஒன்றை பணியமர்த்துவது தொடர்பில் சிலர் தவறுதலாக புரிந்துக் கொண்டுள்ளனர்” என்று அவர் சொன்னார்.

“இந்தக் காப்புறுதி திட்ட்த்தை அமல்படுத்துவதால், கிளினிக் அல்லது மருத்துவமனைகளில் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் பாதிப்பு நேரும் என்று சிலர் கருதுகின்றனர். அவ்வாறு ஏதும் நேராது.

“வெளிநோயாளிக்கான சிகிச்சையை பெற பி40 பிரிவினர், ரிம.1-யை செலுத்துவர். ஆலோசனை மற்றும் இதர சேவைகளை பெற்றுக் கொள்ள, அவர்கள் ரிம.5-யை செலுத்துவார்கள்” என்று அவர் விளக்கினார்.

அதே வேளையில், மூன்றாம் தர வார்டுகளில் தங்குவதற்கு, பி40 பிரிவினர் ரிம.3-யை செலுத்துவர். அறுவை சிகிச்சைக்கு, ரிம.10-திலிருந்து ரிம.200-க்கு உட்பட்ட தொகையை அவர்கள் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

ஏழைகளுக்கான சுகாதார காப்புறுதி திட்டத்தின் நிலைமை குறித்து கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ எழுப்பிய கேள்விக்கு, டாக்டர் ஜூல்கிப்ளி அவ்வாறு பதிலளித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker