Latestஉலகம்

செல்பி எடுத்த போது விபரீதம்: 700 அடி பள்ளத்தில் விழுந்து உயிர்நீத்த இந்திய தம்பதி!

வாஷிங்டன், அக்.31- சாகச பயணம் மேற்கொள்ளும் ஆசையில் அமெரிக்கா சென்ற இளம் தம்பதியர் ‘செல்பி’ எடுக்கும் போது சுமார் 700 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத், தனது மனைவி மீனாட்சியுடன் கலிபோர்னியா மாநிலத்திற்கு சமீபத்தில் குடிபெயர்ந்தார். சான் ஜோஸ் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் சிஸ்கோ நிறுவனத்தில் சிஸ்டம் பொறியியலாளராக அவருக்கு பணி கிடைத்தது.

அமெரிக்கா சென்ற விஷ்ணு சாகச பயணங்களில் ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக தம்பதியினர் அடிக்கடி சுற்றுலா சென்று அங்குள்ள மலைகளின் உச்சியில் நின்று பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை தொடர்ந்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு
செய்து வந்துள்ளனர்.

அந்த வகையில் அண்மையில் பிரபலமான ‘யோஷிமிட்டி’ தேசிய பூங்காவிற்கு இருவரும் சென்றனர். அப்போது அங்குள்ள 700 அடி பள்ளத்தாக்கில் இருவரும் எதிர்பாராத விதமாகி விழுந்து இறந்தனர். செல்பி எடுத்த போது இந்த விபரீதம் நடந்ததாக கூறப்பட்டது இவர்களது உடல்களை பூங்கா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker