Latestமலேசியா

பிரிபூமியில் அம்னோ எம்.பி.களா? விஷப் பாம்பின் வலைக்குள் மலைப் பாம்புகளா? -துங்கு ரசாலி

கோலாலம்பூர், அக்.31- அம்னோ எம்பிகள் பலர், அக்கட்சியிலிருந்து வெளியேறி பிரிபூமி கட்சியில் இணையப் போகிறார்கள் என்பது, விஷப் பாம்பின் வலைக்குள், மலைப்பாம்புகள் ஊடுருவதற்கு சமம் என்று அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துங்கு ரசாலி ஹம்ஸா வர்ணித்துள்ளார்.

அம்னோ எம்பிகள், கூண்டோடு பிரிபூமி பெர்சத்து கட்சிக்கு போகப் போகிறார்கள் என்று வதந்திகள் பரவியுள்ளன. அப்படியே அவர்கள் போனாலும் அதற்காக தாம் கவலைப் படப் போவதில்லை என்று அவர் சொன்னார்.

“அவர்களை எவ்வாறு தடுப்பது? உடைந்து விடக் கூடிய மரக் கிளைகளை பிடித்து தொங்கும் நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது” என்று அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அம்னோவைச் சேர்ந்த 40 எம்.பி.கள், கூடிய விரைவில் பிரிபூமி கட்சியில் இணைய உள்ளனர் என்று பிரிபூமி உச்சமன்ற உறுப்பினர் காதீர் ஜாசின் அண்மையில் கூறினார். அது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு துங்கு ரசாலி இவ்வாறு பதிலளித்தார்.

அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு இதுவரை குறையவில்லை என்றும், அம்னோ என்றும் அழிந்து விடாது என்றும் ரசாலி கூறினார்.

“அம்னோ கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வந்தது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும், கிராமங்களிலும், வட்டாரங்களிலும், அரசாங்கத்திலும் அம்னோவை நாம் இதுவரை காண முடிகிறது. அம்னோவிற்கு அழிவில்லை என்பது இதன் வாயிலாக நன்றாகவே தெரிகிறது” என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker