Latestஉலகம்

விண்ணில் தெரிந்த ‘கடவுளின் கை’- தீயாய் பரவிய நாசா படம்

வாஷிங்டன், அக்.31-அறிவியலும் மதமும் எதிர்ரெதிர் துருவங்கள் என்கிற போதிலும் சில சமயம் இரண்டும் ஒன்றாய் இணைந்து காட்டிய புது விளக்கம் தான் இந்த “கடவுளின் கை” புகைப்படம்.

அண்மையில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப், விண்ணில் கைவடிவத்தில் தோன்றிய விண்பொருளை புகைப்படம் எடுத்துள்ளது.

ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் மூலம் கை போன்ற வடிவம் விண்ணில் உருவாகி உள்ளது.

அந்தக் காட்சியை நாசாவின் நுக்லியர் ஸ்பெக்டரோஸ்கோபிக் என்ற டெலஸ்கோப் புகைப்படம் எடுத்துள்ளது. புகைப்படத்தில் அதி ஆற்றல் எக்ஸ் கதிர்கள் நீல நிறத்திலும் குறைவான ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலும் தெரிகின்றன என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.

வெடிப்பில் வெளியான பொருட்கள் நிஜமாகவே கைபோன்ற வடித்தை உருவாக்கியதா அல்லது பார்ப்பதற்கு அப்படி தெரிகிறதா? என்பது பற்றிய விளக்கம் இல்லை.

இருப்பினும், விண்ணில் தோன்றியது கடவுளின் கை என்று பெயர் சூட்டியது, சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. மேலும் சிலர் இந்த கடவுளின் கையை உளவியல் நிகழ்வு என்று கூறுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker