Latestமலேசியா

2020-குள் கார்களில் குழந்தைகளுக்கான தனி இருக்கை கட்டாயம்!

கோலாலம்பூர்,அக்.31- 2020-க்குள் கார்களில் குழந்தைகளுக்கான தனி இருக்கை கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான தனி இருக்கை அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் மீதான விழிப்புணர்வை அடுத்தாண்டு முதல் மக்களிடம் கொண்டு சேர்க்க தமதமைச்சு திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்புதிய விதிமுறையை இந்தாண்டே அறிமுகம் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், குழந்தைகளுக்கான இருக்கைகள் தற்போதைக்கு சந்தையில் போதுமானதாக இருக்காது என்பதால் அதன் அமலாக்கத்தை ஒத்தி வைத்ததாக அந்தோனி லோக் கூறினார்.

மேலும் குழந்தைகளுக்கான தனிப்பட்ட கார் இருக்கைகள் மலிவான விலையில் கிடைக்க கூடுதல் அவகாசம் தேவை என்றார் அவர். குழந்தை இருக்கைகளுக்கு, விற்பனை வரி விதிக்க வேண்டாம் என தமது அமைச்சு நிதியமைச்சுக்குப் பரிந்துரைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker