Latestமலேசியா

அல்தான் துயா கொலை: தீபக்கிடம் வாக்குமூலம் பதிவு! ! -ஐஜிபி

கோலாலம்பூர், நவ.1- மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயா கொலை வழக்கிற்கும் தொழிலதிபர் தீபக்கிற்கும் இடையிலான தொடர்பு குறித்து அவரிடம் புக்கிட் அமான் போலீஸ் வாக்குமூலம் பெற்று விட்டது என்று போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் கூறினார்.

அவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப் பட்டுள்ள இதர தரப்பினரிடமும் போலீஸ் வாக்குமூலம் பெறும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

“சம்பந்தப் பட்டவர்களிடம் நாங்கள் வாக்குமூலங்களை பெறவுள்ளோம். அது குறித்த விசாரணை முழுவடைந்த பின்னர், விசாரணை அறிக்கையை நாங்கள் அரசு தரப்பு துணை வழக்கறிஞருக்கு அனுப்பி வைப்போம்” என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

அல்தான் துயா கொலை வழக்கில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் சம்பந்தப் பட்டுள்ளனர் என்று கூறப் பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களிடம் அதன் தொடர்பில் வாக்குமூலம் பெறப் பட வேண்டும் என்று புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker