Latestசினிமா

‘சர்கார்’ திருட்டுக் கதை: ‘என் வேலை வசனம் மட்டுமே!’ – எழுத்தாளர் ஜெயமோகன்

சென்னை, நவ. 1- சர்கார் கதை விவகாரம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் அளித்துள்ளார். சர்கார் கதை பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததது. கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் எல்லாம் ஏ.ஆர் முருகதாஸ் தான் என அறிவிக்கப்பட்ட பிறகும் ஆங்காங்கே சில பூசல்கள் தொடர்கின்றன.

குறிப்பாக, 42 நாட்கள் சர்கார் கதையை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் உட்கார்ந்து செதுக்கினோம் என எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீண்டும் இது தொடர்பாக விளக்கம் தந்துள்ளார்.

‘நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் நேரில் அமர்ந்து பார்த்ததன் அடிப்படையில் அதன் கதை, திரைக்கதை ஏ.ஆர் முருகதாஸூடையது. அது ஒற்றை வரியிலிருந்து திரைக் கதையான போது நான் உடனிருந்தேன்.

ஆகவே அதைப் பதிவு செய்வது என் கடமை என நினைத்தேன்.  கதை உருவாக்கத்தில் அவருடன் நான்கு உதவியாளர்கள் உதவினார்கள். ஒருவர் ஏற்கனவே ‘மான் கராத்தே’ படம் இயக்கிய திருக்குமரன்,

இன்னொருவர் என் நண்பரும் ‘வத்திக்குச்சி’ இயக்குனருமான கிங்க்ஸ்லின்.என் பணி திரைக்கதைக்குரிய ஓட்டத்துடன் அது அமைகிறதா அல்லது சிதறிச் செல்கிறதா? என்று பார்ப்பதும் காட்சிகளுக்கு அவற்றுக்குரிய வசன வடிவமைப்பதும் மட்டுமே. எல்லா படங்களிலும் என் பணி அவ்வளவு தான். இவ்வாறு எழுத்தாளர் ஜெயமோகன் பதிலளித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker