Latestஇந்தியா

தனது பாடல் காப்புரிமை; -இளையராஜா மீண்டும் எச்சரிக்கை

சென்னை, நவ.1- இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் காப்புரிமை பற்றி குற்றவியல் வழக்கின் தீர்ப்பு வெளியாகிய நிலையில், அது குறித்து இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா தமது பாடல் காப்புரிமை தொடர்பாக விடுத்திருக்கும் அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:-

‘நான் 2014 ஆம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின் படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அத்தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை.

அதை மீறுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவரும். நான் 2010 ஆம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் புகார் அளித்தேன்.

சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சீடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே ஏற்று வெளிவந்தது.

அதில் நீதிபதி எக்கோ நிறுவனம் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என்று அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சிலர் என்னுடைய வழக்கே ரத்து என்று செய்தி வெளியிடுகிறார்கள். 4 ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker