Latestஇந்தியா

பாலியல் புகாரில் கர்நாடக முதல்வர்! -எம்எல்ஏ எச்சரிக்கை

பெங்களுரூ. நவ.1-கர்நாடக முதல்வர் குமாரசாமியும் விரைவில் மீ-டூ விவகாரத்தில் சிக்குவார் என பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா ஒரு புதுக் குண்டைப் போட்டு அம்மாநில அரசியலை பரபரப்பாக்கில் உள்ளார்.

மீ-டூ விவகாரம் நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”என் தந்தையான முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் குமாரசாமி கூறி வருகிறார். அவர் அரசியல் செய்யட்டும். ஆனால் தனி மனிதக் குற்றச்சாட்டுகள் கூடாது.

அவர் இது போல தொடர்ந்து என் தந்தையைப் பற்றியோ அல்லது என்னைப் பற்றியோ தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் குமாரசாமி விரைவில் மீ-டூ புகாரில் சிக்குவார். அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அவர் மீது புகார் கொடுக்க முன் வருவார்.

குமாரசாமியால் பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

குமாரசாமி அவருடைய முதல் மனைவி அனிதாவை பஞ்சாயத்து தலைவர் ஆக்கியுள்ளார். தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தருகிறார். அதுபோல் அவரது 2ஆவது மனைவியும் முன்னாள் நடிகையுமான ராதிகாவையும் அவர் ஒரே மாதிரி நடத்த வேண்டும் அல்லவா?

அவரை அவரது குடும்ப உறுப்பினராக அறிமுகப்படுத்தாதது ஏன்?
அவரையும் பிரசாரத்துக்கு அழைத்து செல்லுங்கள் வேறு தொகுதியில் போட்டியிட வையுங்கள். எனது தந்தையின் பெயரை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருப்பதை அவர் நிறுத்தவேண்டும் இவ்வாறு குமார் பங்காரப்பா கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker