Latestமலேசியா

மூளை செயல்திறன் குன்றிய குழந்தைகளுடன் தீபாவளிக் கொண்டாட்டம்!

ஜோர்ஜ் டவுன்,நவ.1- தீபாவளித் திருநாள் ஆண்டுக்கு ஒரு முறை வந்து போகும் ஒரு பண்டிகையாக மட்டும் கொண்டாடப்படாமல் பிறர் வாழ்வில் வண்ணம் சேர்க்கும் அர்த்தமுள்ள கொண்டாட்டமாகவும் அது இருக்க வேண்டும். அந்த வகையில், பினாங்கு அடிப்படை சமூகநல அமைப்பு ‘Cerebral Palsy’ எனப்படும் மூளை செயல்திறன் குறைபாடுள்ள குழந்தைகளோடு முன்கூட்டியே தீபாவளியைக் கொண்டாடியது.

“குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். அதிலும், எங்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இந்தக் குழந்தைகளின் முகங்களில் சிரிப்பைப் பார்த்ததில் பேரானந்தமாக இருக்கிறது” என அச்சமூகநல அமைப்பின் தோற்றுநர் அழகேசன் ஐயாரு தெரிவித்தார்.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது, ஆடல், பாடல் என இந்தக் குழந்தைகள் மிகவும் குதூகலத்துடன் இருந்தார்கள் எனவும், அவர்களை இப்படி எப்போதாவது தான் பார்க்க முடியும் என்று பினாங்கு செரெபல் பால்சி அமைப்பின் தலைவர் இங் பூக் ஓன் மனம் நெகிழ்ந்து கூறினார்.

குழந்தைகளுக்கு சுவையான விருந்து படைக்கப்பட்ட வேளை அவர்களுக்கு அன்பளிப்புகளை அழகேசன் எடுத்து வழங்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker