Latestஉலகம்

லையன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்பு!

ஜகார்த்தா,நவ.1- விபத்துக்குள்ளான லையன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி கடலிலிருந்து மீட்கப்பட்டதாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை 10.15 மணிக்கு மேற்கு ஜாவா அருகே அந்தப் பெட்டி மீட்கப்பட்டது.

ஒவ்வொரு விமானத்திலும் குரல் பதிவு, தகவல் பதிவு ஆகியவற்றுக்காக இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும்.

விமானம் பறக்கும் வேகம், உயரம், திசை ஆகியவை குறித்த தகவல்கள் அந்தப் பெட்டிகளில் பதிவாகும். விமானி அறையின் செயல்பாடுகள், குரல் பதிவும் கூட அந்தப் பெட்டியில் பதிவாகும். அவற்றில் எந்தப் பெட்டி மீட்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

அக்டோபர் 29-ஆம் தேதி, ஜகார்த்தாவில் இருந்து பங்கால் பினாங்கிற்கு காலை 6.20 மணிக்கு புறப்பட்ட விமானம், 13 நிமிடங்களிலே கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்து 189 பேரும் உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker