Latestமலேசியா

கமலா-செல்வராஜா இரட்டைக் கொலை: ஒரு நபர் கைது!

ஸ்கூடாய்,நவ.2- நேற்று முன் தினம் தாமான் உங்கு துன் அமினா 3 மாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் நிகழ்ந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை, ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் டயீப் அகமட் அறிவித்தார்.

கைதான சந்தேக பேர்வழிக்கு 56 வயது. அந்த தகவலை தவிர அவர் வேறு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. ஏனெனில், அது போலீஸ் விசாரணையைப் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

51 வயது கமலா என்ற தனித்து வாழும் ஒரு மாதுவும், அவரது வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த 59 வயது எஸ்.செல்வராஜா என்ற ஆடவரும் சரமாரியாக வெட்டப்பட்டு இறந்து கிடந்தனர். சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றிருந்த கமலாவின் 31 வயது மகள் காலை 9 மணிக்கு வீடு திரும்பியதும் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார்.

சிங்கப்பூரில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்த கமலாவின் சடலம் படுக்கை அறையிலும், சில்வராஜாவின் சடலம வரவேற்பு அறையிலும் கிடந்தன.

வீட்டுக் கதவுகள் ஏதும் உடைக்கபடவில்லை. மாறாக, வாசல் கதவும் பின்வாசல் கதவும் திறந்திருந்ததால் கமலாவுக்கும், சில்வராஜாவுக்கும் நன்கு அறிமுகமானவர்களே இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுவதாக
தொடக்கத்தில் சந்தேகிக்கப்பட்டது. அதே சமயத்தில், வீட்டில் இருந்த நகைகளும், பணமும் கூட காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு கொலை நடந்த வீட்டில் வாய்ச் சண்டைப் போடுவது போல ஏறத்தாழ 10 நிமிடங்களுக்கு சத்தம் கேட்டதாகவும், பிறகு அமைதியாகிவிட்டதாகவும் அண்டை வீட்டார் தெரிவித்தனர். வீடு பூட்டிருந்ததால் தங்களுக்கு சந்தேகம் ஏதும் வரவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர். அந்த வீட்டில் இருந்து படிக்கட்டு வரை மிளகாய்த் தூள் தூவப் பட்டிருந்தது. ஏன் மசாலாத் தூள் தூவப் பட்டிருந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை யாரும் வந்ததற்காக கால் தடம் தெரியக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டதா என சந்தேகிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker