Latestமலேசியா

எம்பி மீது பாலியல் புகார்; அரசு வழக்கறிஞரிடம் விசாரணை அறிக்கை!

கோலாலம்பூர், நவ.2- 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள பெர்லீஸ் மாநில எம்பி தொடர்பிலான விசாரணை அறிக்கை கூடிய விரைவில் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அனுப்பி வைக்கப் படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபூஸி ஹரூண் கூறினார்.

சம்பந்தப் பட்ட எம்பியிடம் போலீஸ் இரு தினங்களுக்கு முன்பே, விசாரணை நடத்தி விட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த எம்பி யார் என்ற தகவலை முகமட் ஃபூஸி வெளியிடாத போதிலும், தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்று ஆராவ் எம்பி டத்தோஶ்ரீ ஷாஹிடான் காசிம் சொன்னார்.

அந்த விவகாரம் தன்னை அவமானப் படுத்தும் வகையில், தனது அரசியல் எதிரிகளால் ஜோடிக்கப் பட்டுள்ளதாக ஷாஹிடான் கூறினார்.
“அவ்விவகாரம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை போலீஸ், அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கூடிய விரைவில் அனுப்பி வைக்கும்” என்று ஃபூஸி குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker