Latestஇந்தியா

‘பிரதமர் மோடி, என்ன பறவை எச்சமா?’ -சர்ச்சையில் சிக்கிய நடிகை திவ்யா!

புதுடில்லி, நவ.2- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் நடிகையுமான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, பிரதமர் நரேந்திர மோடியை மோசமாக கிண்டல் செய்து டுவிட்டரில் பதிவிட்டிருந்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதற்கு ஒற்றுமையின் சிலை என்று பெயர் வைக்கப்பட்டது.

சிலையின் பாதத்திற்கு கீழ் மோடி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை, நடிகை திவ்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு கீழே அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளன.

அதாவது மிக பிரம்மாண்டமான சிலையின் கீழ் சிறிய உருவமாக மோடி நிற்பதால் ‘அது என்ன பறவை எச்சமா?’ என திவ்யா கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். இந்த டுவிட் 3,800 லைக்குகளையும் 1,200 மறு பதிவுகளையும் பெற்றது.

ஆனால், ஒரு நாட்டின் பிரதமருக்கு இது மிகப் பெரிய அவமானம் என சிலர் திவ்யாவை நோக்கி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மேலும் பாஜக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திவ்யா ஸ்பந்தனவை கடுமையாக விமர்ச்சித்துள்ளது.

அத்துடன் இது சர்தார் படேல் மீதான வரலாற்று ரீதியான இழிவு என்றும் மோடி மீதான நோய்க்கூறான வெறுப்பு என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக திவ்யா மீது தேச விரோத வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker