Latestமலேசியா

பேரா சுல்தான் பிறந்தநாள்: மந்திரி புசாருக்கு ‘டத்தோஶ்ரீ’ பட்டம்!

ஈப்போ,நவ.2- பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவின் 62-ஆவது பிறந்தநாளை முன்னிட்டி மந்திரி புசார் அகமட் பாய்சால் அஸுமுவுக்கு டத்தோஶ்ரீ பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேரா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அகமட் பாய்சாலுடன் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் தோ புவா டாக்டர் அய்ஷா ஓங்கிற்கும் டத்தோஶ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றும் நவம்பர் 10-ஆம் தேதியும் மொத்தம் 285 பேருக்கு பேராக் அரசின் உயரிய பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டங்களைப் பெறுபவர்கள் பல்வேறு துறைகளில் நாட்டுக்காகவும் மாநிலத்துக்காகவும் சேவை ஆற்றியவர்கள் ஆவர்.

இதனிடையே, 2015-ஆம் ஆண்டில் பேரா சுல்தானாக அரியணை அமர்ந்த சுல்தான் நஸ்ரின் ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் முறையாக வரும் சனிக்கிழமை இரவு 7.50 மணிக்கு இஸ்தானா இஸ்காண்டாரியா வளாகத்தில் 10 நிமிடங்களுக்கு வான வேடிக்கை இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker