Latestமலேசியா

விமானம் 5 மணி நேரம் தாமதம்; மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகளிடம் மன்னிப்பு!

கோலாலம்பூர்,நவ.2- நேற்று கோலாலம்பூரில் இருந்து புது டில்லிக்கு காலை 6.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் காலை 11 மணிக்கு தாமதமாகப் புறப்பட்டதற்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த எம்.எச்.191D விமானம் தாமதமாகப் புறப்பட்டு புது டில்லியை மாலை 2 மணிக்கு அடைந்தது.

நாளை புது டில்லியில் இருந்து கோலாலம்பூர் திரும்பும் அதே விமானம் தாமதமாக மாலை 3 மணிக்கு கிளம்பி கோலாலம்பூரை இரவு 10.50 மணிக்குத்தான் வந்தடையும் எனவும் அந்நிறுவனம் முன்னறிவிப்புச் செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட விமானத்தில் எதிர்பாரா விதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அதன் விமானப் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்காக வருந்தினாலும், அந்த விமானத்தில் பயணிப்பவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகிறது என மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தாமதமாக புறப்பட்ட சம்பந்தப்பட்ட விமான பயணிகளுக்கு விமானம் புறப்படும் வரையில் தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி அனைத்தும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர் சமூக ஊடகங்களில் இது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திருந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker