Latestமலேசியா

1எம்டிபி: அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! –ஜோ லோவ்

கோலாலம்பூர், நவ.2- 1எம்டிபி நிறுவனத்திற்கு சொந்தமான பல பில்லியன் தொகையை மோசடி செய்ய திட்டம் வகுத்து, அந்த நிதியை மோசடி செய்ததாக அமெரிக்க கூட்டரசு நீதிமன்றத்தில் தொழிலதிபர் ஜோ லோவ் மீது வழக்கு தொடங்கப் பட்டுள்ளது.

தம் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, தாம் நிரபராதி என்று, தலைமறைவாகி வாழ்ந்து வரும் ஜோ லோவ் கூறினார்.

ஜோ லோவ் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றங்கள் நிரூபனம் ஆகும் வரையில், அவர் நிரபராதி தான் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று, ஜோ லோவ்வின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“1எம்டிபி நிறுவனத்தில், ஜோ லோவ் எவ்வித பதவியையும் வகிக்கவில்லை. அவருக்கு, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமோ, மலேசிய அரசாங்கமோ அல்லது அபு டாபி அரசாங்கமோ எவ்வித பதவியையும் வழங்கவில்லை.

“ஜோ லோவ் புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஒப்பந்தப் பத்திரங்கள் அனைத்தும், அனுபவமிக்க, நன்கு கட்டுப்படுத்தப் பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களால் தயார் படுத்தப் பட்டுள்ளன” என்று வெல்ஸ் ஹஸ்லீம் மேய்ஹீவ் மூலோபாய பொது விவகாரங்களின் தலைமை நிர்வாகி பென்ஜாமின் ஹஸ்லீம் சொன்னார்.

அவரின் அக்கருத்துகள் ஜோ லோவ்வின் வலைத்தள பகுதியிலும் பகிரப் பட்டுள்ளது. ஜோ லோவ் மற்றும் ரோஜர் இங் சோங் ஹ்வா என்ற மலேசியர் மீது, நேற்று நியூ யோர்க்கில் குற்றங்கள் பதிவு செய்யப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker