Latestமலேசியா

ஆற்றில் குதிக்குமாறு சொன்ன ஓர் அமானுஷ்ய குரலுக்காக ஆற்றில் விழுந்த 15 வயது மாணவி!

தைப்பிங்,நவ.3- தன்னை ஆற்றில் குதிக்குமாறு ஓர் ஆண் காதில் வந்து சொல்வது போல் கேட்டதால் தானும் அவ்வாறு செய்ததாக கமுண்டிங், கம்போங் குர்னியா ஜெயாவில் உள்ள சுங்கை ரேலோங் ஆற்றில் குதித்த 15 வயது மாணவி தெரிவித்தாள்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு நிகழ்ந்ததாகவும், நல்ல வேளையாக அம்மாணவியை காதலன் காப்பாற்றயதால் அவள் உயிர்த் தப்பியதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமர் தயீப் கூறினார்.

அந்த மாணவி ஆற்றில் குதிப்பதற்கு முன்னதாக அவள் முதல் நாள் இரவு வீட்டுக்குச் செல்லாமல் இருந்ததற்காக தனது காதலனிடம் இருந்து திட்டு வாங்கியிருக்கிறாள். அச்சமயத்தில் திடீரென அவள் அருகிலுள்ள ஆற்றில் குதித்ததாக அவளது காதலன் போலீஸ் விசாரணையில் குறிப்பிட்டுள்ளான்.

மாணவியைக் காப்பாற்றிய பிறகு இச்சம்பவம் குறித்து அவனே போலீசுக்கு தகவல் அளித்திருக்கிறான்.

தைப்பிங் மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும், அவருக்கு உடம்பில் எந்தக் காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மேம் மாதம், மன உளைச்சல் காரணமாக அந்த மாணவி ஒரு வார காலம் வார்ட்டில் தங்கில் உளவியல் சிகிச்சை எடுத்திருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker