Latestசினிமா

‘சர்கார்’ பட விவகாரம்: பாக்யராஜ் மிரட்டப் பட்டாரா?

சென்னை.நவ. 3- சர்கார் பட விவகாரத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் பாக்யராஜ் சில பெரு நிறுவனங்த்தினால் மிரட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் கதை தன்னுடைய செங்கோல் கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் சர்கார் கதையும் வருணின் ‘செங்கோல்’ என்ற கதையும் ஒன்று தான் எனக் கூறினார்.

இதனையடுத்து நீண்ட இழுபறிக்குப் பிறகு சர்கார் கதை திருட்டு விவகாரத்தை ஒப்புக் கொண்ட இயக்குனர் முருகதாஸ், வருண் ராஜேந்திரன் பெயரை படத்தில் போடவும் அவருக்கு சன்மானமாக 30 லட்சம் ரூபாயும் அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.

சர்கார் கதை விவகாரத்தில் ஈடுபட்டதால் தான் தனிப்பட்ட முறையில் பல அசௌகர்யங்களுக்கு ஆளானதால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று பாக்யராஜ் அறிவித்தார். ஆனால் சங்க நிர்வாகிகள் அவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில், பாக்யராஜ் சில சினிமா படத்தயாரிப்பு பெரு நிறுவனத்தினால் மிரட்டப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் சர்கார் படத்திற்கு இடையூறாக பாக்யராஜ் இருந்தாகவும். மேலும் அவரது மகன், மனைவி சிறு வேடத்தில் நடித்தாலும் கூட அந்த படங்களை தங்களின் நிறுவனம் வாங்காது என பிரபல நிறுவனம் எச்சரித்ததாகவும் தெரிய வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker