Latestஉலகம்

ராஜபக்சேவுக்கு தமிழர் எம்.பி ஆதரவு: உடனே துணையமைச்சர் பதவி

கொழும்பு, நவ.3- இலங்கையில் அண்மையில் யு.என்.பி எனப்படும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்கேவை, பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிரிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 எம்.பி.க்களில் , யுஎன்பிக்கு 106 பேர் உள்ளனர். ரஜபக்சே தரப்பில் 96 பேர் மட்டுமே உள்ளனர். ஆட்சி அமைக்க 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நவம்பர் 16-இல் கூடவுள்ளது.

இந்நிலையில் 16 எம்பிக்கள் உள்ள தமிழர் தேசிய கூட்டணியை நேர்ந்த விளந்திரயன், அதில் இருந்து விலகி, ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து கிழக்கு மாகாண மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக விளந்திரனை நியமித்துள்ளார் ராஜபக்சே.

இதனிடையே விளந்திரையனைத் தொடர்ந்து மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர், இரண்டு நாட்களுக்குள் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker