Latestஉலகம்

லையன் ஏர் விமான விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த முக்குளிப்பு வீரர் மரணம்!

ஜகார்த்தா,நவ.3- காராவாங் நீரிணையில் விழுந்து விபத்துக்குள்ளான லையன ஏன் விமானத்தில் உயிரிழந்த பயணிகளின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது முக்குளிப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஷாச்ரூல் அந்தோ உயிரிழந்து விட்டதை கடற்படைத் தளபதி இஸ்வார்த்தோ உறுதிப்படுத்தினார்.

நேற்று மாலை திடீரென வானிலை சரி இல்லாமல் போனதால் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களையும் பயணிகளின் உடல்களையும் தேடும் பணிகள் மாலை 4 மணியோடு நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஷாச்ரூல் மட்டும் கடலிலேயே இருந்திருக்கிறார்.

மாலை 5.30 மணி அளவில் ஷாச்ரூல் சுயநினைவின்றி மீட்கப்பட்டிருக்கிறார். பின்னர் அவர் உடனடியாக ஜகார்த்தா உத்தாராவிலுள்ள கோஜா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டிருக்கிறார். எனினும், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக இஸ்வார்த்தோ கூறினார்.

மனிதநேய உதவிகளில் ஈடுபடுவதில் உயிரிழந்த ஷாச்ரூல் அதிக ஆர்வம் காட்டுபவராம். ஷாச்ரூலின் மறைவால் அவரது குடும்பத்தாரும் சகப் பணியாளர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker