Latestமலேசியா

தமிழிலேயே தீபாவளி வாழ்த்து கூறிய சுகாதார அமைச்சரின் காணொளி! அவரது அன்பான வேண்டுகோள்! -(VIDEO)

கோலாலம்பூர், நவ.4- மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஷுல்கிப்ளி தீபாவளியை முன்னிட்டு தமிழிலேயே வாழ்த்துச் செய்தி காணொளி ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் தீபாவளியைக் கொண்டாடும் இந்தியர்களுக்காக சுகாதார அமைச்சர் என்ற முறையில் அன்பான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

தீபாவளியை செவ்வாயன்று கொண்டாடவிருக்கும் மலேசியர்களின் மனதில் லட்டு, முறுக்கு, மற்றும் இனிப்பான தேநீர் என்றெல்லாம் நிழலாடும்.

ஆனால், 21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான அரக்கனாக விளங்கும் சீனியை குறைத்து விடுங்கள் என்ற வேண்டுகோளை அமைச்சர் விடுத்துள்ளார்.

‘வணக்கம்.., நான் டாக்டர் ஷுல்கிப்ளி. உங்கள் சுகாதார அமைச்சர்’ என்று அவர் தமிழிலேயே பேசி தீபாவளி வாழ்த்தினை காணொளியில் வெளியிட்டுள்ளார்.

தீபாவளி தருணத்தில் இனிப்பு சாப்பிடுவதை குறைத்து விடுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருபது வினாடி நேரத்தைக் கொண்ட அந்த காணொளியில் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்தினை அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் அதிக அளவில் சீனிப்பொருள்களை உட்கொள்ளுதல் ஆகியவை தொடர்பான பல நோய்களுக்கு மலேசியர்கள் நீண்ட காலமாகவே இலக்காகி வருகின்றனர் என்று அமைச்சர் ஷுல்கிப்ளி சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி மலேசியா அதிக உடல் பருமனைக் கொண்டவர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் இருந்து வருகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker