Latestமலேசியா

1எம்டிபி ஊழலே, தே.மு. தோல்விக்கு காரணம்: கைரியின் கருத்தை ஆதரித்தார் நஸ்ரி!

கோலாலம்பூர், நவ.4- கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டதற்கு 1எம்டிபி ஊழல் விவகாரம் காரணம் என்று கைரி ஜமாலுடின் கூறியிருக்கும் கருத்தைத் தாம் ஏற்றுக் கொள்வதாக பாரிசான் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸீஸ் தெரிவித்தார்.

இந்த ஊழல் நடந்து, ஊடகங்களில் இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பிய பின்னர் அது தொடர்பான பல முடிவுகளை அமைச்சரவை அறிய நேர்ந்தது என்று முன்னாள் அமைச்சருமான நஸ்ரி சொன்னார்.

பக்காதான் ஹராப்பான் கூட்டணியின் மோசடிகள், அவதூறுகள், பொய் வாக்குறுதிகள் ஆகியவற்றின் காரணமாகத் தான் தேசிய முன்னணி தோல்வி கண்டது என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் குற்றஞ்சாட்டி இருந்தார்.

எனினும், தேர்தல் தோல்விக்கு 1எம்டிபி ஊழல் தான் மட்டும்தான் காரணம் என்று கைரி விளக்கினார். இந்தக் கருத்தை தாம் ஆதரிப்பதாக பாடாங் ரெங்காஸ் எம்.பி.யான நஸ்ரி கூறினார்.

1எம்டிபி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக அமைச்சர்களுக்கு தெரிவிக்கப் பட்டதால் அவர்கள் அப்போது ஏற்றுக் கொண்டார்கள். அதனால் தான் அமைச்சர்கள் அதனை தற்காத்துப் பேசினர். 1எம்டிபி ஊழல் காரணமாக மக்கள் எங்களை நிராகரித்து விட்டார்கள் என்பது உண்மையே என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker