Latestமலேசியா

எம்.பி.க்களின் ஆதரவை பெற தமிழ்க் கைதிகள் விடுவிக்க ராஜபச்சே திட்டம்!

கொழும்பு, நவ.5- இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சே தமிழ் எம்பிக்களின் ஆதரவை பெறும் நோக்கில் சிறையில் போர்க் கைதிகளாக உள்ள தமிழர்களை விடுதலை செய்வார் எனக் கூறப்படுகிறது.

இலங்கையில் 2015 -இல் நடந்த அதிபர் தேர்தலின் போது யு.பி.எப்.ஏ எனப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான மைத்திரி பால சிரிசேனாவுக்கு ரணில் க்கரமசிங்கேவின், யு.என்.பி எனப்படும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற சிரிசேனா அதிபராகவும், ரணில் பிரதமராகவும் பதவி ஏற்றனர்.

சமீப காலமாக விக்கிரமசிங்கேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும் பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமிப்பதாகவும் அதிபர் சிரிசேனா அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதமராக் பொறுப்பேற்றுள்ள ராஜபக்சே தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க ராஜபக்சே ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜபக்சேவின் மகன் நமல் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ள பதிவில் இலங்கை சிறையில் உள்ள தமிழ்க் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் ராஜபக்சே விரைவில் முடிவு எடுக்க உள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

சிறையில் உள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. தமிழ்க் கைதிகளை விடுப்பதன் மூலம் தமிழ் எம்பிக்களின் ஆதரவை பெற்று தமக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க முடியும் என ராஜபக்சே கருதுவதாக தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker