Latestசினிமா

நடிகை அமலா பாலின் புது மாப்பிள்ளை யாரோ?

சென்னை, நவ.4- ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும்- இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் இடையேயான திருமணம் 2014 இல் நடந்து, மூன்றே ஆண்டுகளில் முறிந்த நிலையில் அமலா பால் 2ஆவது திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்ற பரபரப்பான தகவல் கசிந்துள்ளது.

விவாகரத்திற்கு பின்னர் நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் 27 வயதாகும் அமலாபால் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள நடிகை அமலாபால், “நானாக முடிவெடுத்த எனது முதல் திருமணம் சரியாக அமையவில்லை. ஆகையால் எனது இரண்டாவது திருமணத்தை எனது தாய் தந்தையர் முடிவுக்கே விட்டு விட்டேன்’ என்றார்.

இதற்கிடையில் நடிகை அமலாபால் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் யாரென்று தெரியாத நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பால் ஓர் ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் அந்தப் புகைப்படத்தில் இருப்பவரை தான் நடிகை அமலாபால் இரண்டாம் திருமணம் செய்யப் போகும் புது மாப்பிள்ளை என்ற தகவல் இப்போது பரவலாகி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker