Latestமலேசியா

நவ.13 முதல் டிசம்.13 வரை எஸ்பிஎம் தேர்வு; அட்டவணைகளை கவனிக்க தவறாதீர்!

கோலாலம்பூர், நவ. 5- நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தேர்வில் மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 706 மாணவர்கள் பங்கேற்வுள்ளனர்.

கிட்டத்தட்ட 3,308 தேர்வு மையங்களில் தேர்வெழுதவிருக்கும் இந்த மாணவர்கள், தாங்களின் தேர்வுத்தாள்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள தேர்வு அட்டவணைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தேர்வு எழுதும் தருணங்களில் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்ற விபரங்களை அதில் கண்டறிந்து வைத்துக் கொள்ளும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

இந்த தேர்வு அட்டவணையை மாணவர்கள் lp.moe.gov.my. இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு வரும் போது மாணவர்கள் கட்டாயம் தங்களுடைய அடையாளக் கார்டை கொண்டுவர வேண்டும் என்றும் தேர்வு வாரியம் வலியுறுத்தியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker