Latestமலேசியா

பொய் சொல்வதா? மன்னிப்புக் கேட்க வேண்டும் நஜிப்! -உத்துசான் காட்டம்!

கோலாலம்பூர், நவ.5- தனது சொந்த வங்கிக் கணக்கில் இருந்த பணம் குறித்து அம்னோ உறுப்பினர்களிடம் பொய்யுரைத்த முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், அம்னோ உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்துசான் மலேசியா நாளிதழ் வலியுறுத்தியது.

“தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம், எங்கிருந்து வந்தது என்ற தகவல் தனக்கே சரிவர தெரியவில்லை என்று நஜிப் அண்மையில் கூறியுள்ளார். இதற்கு முன்னர், அந்தப் பணம், சவூதி அரேபிய அரச குடும்பத்தின் நன்கொடை என்று அவர் கூறினார்.

“அந்தப் பணம், நன்கொடை பணம் என்று அவர் கூறியதை, அனைத்து அம்னோ உறுப்பினர்களும் நம்பினர். ஆனால், இப்போது அவர் பேச்சை மாற்றுகிறார். அதனால், அவர் அம்னோ உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்று அந்தப் பத்திரிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வளவு பெரிய தொகை தனது வங்கிக் கணக்கிற்கு எவ்வாறு வந்தது என்று தமக்கு தெரியவில்லை என்று நஜிப் கூறுவது நம்பும் வகையில் இல்லை உத்துசான் மலேசியா தலையங்கம் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

“அதுமட்டுமல்லாது, சவூதி அரேபியாவின் அரச குடும்பத்திலிருந்து அந்தப் பணம் நன்கொடையாக வழங்கப் பட்டிருந்தால், அந்த நன்கொடைக்கு நஜிப் நன்றி ஏதும் தெரிவிக்கவில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்” என்றும் அப்பத்திரிக்கை கூறியது.

அல்-ஜஸீரா பேட்டிக்கு நஜிப் வழங்கிய பதில்கள் வாயிலாக, அவரின் பொய்கள் வெளிப்பட்டுள்ளன என்று உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.

“அனைத்து திருடர்களும் பொய்யர் அல்ல. ஆனால், பொய் கூறுபவர்கள், நிச்சயமான திருடுவார்கள் என்பது இதன் வாயிலாக தெள்ளத் தெளிவாகியுள்ளது” என்று அப்பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker