Latestமலேசியா

போதைப்பொருள் கடத்தல்: உக்ரைன் இளம் பெண்ணுக்கு ஆயுள் சிறை!

ஜார்ஜ்டவுன், நவ.5- போதப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு இங்குள்ள உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இருந்து பினாங்கிற்கு விமானத்தில் வந்த லோபாத்கினா கேளேவ்டியா என்ற 24 வயதுடைய அந்தப் பெண், போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.

அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த அவர் கண்ணீர் சிந்தினார். மேலும் கிளேவ்டியா மீதான தீர்ப்புக்ககாக நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த அவருடைய கணவரும் இந்தத் தீர்ப்பை அறிந்து கண்ணீர் சிந்தினார்.

துபாயில் இருந்து கோலாலம்பூருக்கும் பின்னர் பினாங்கிற்கும் சென்ற கிளேவ்டியா, தான் கொண்டு வந்த பிளாஸ்டிக் பேக்கிற்குள் என்ன இருக்கிறது என்பதை சோதித்து பார்ப்பதற்கு போதுமான அவகாசம் இருந்த நிலையில், அந்தப் பைக்குள் சாக்லெட்டுகள் இருந்ததாக தாம் நம்பியதாக கூறப்படுவதை ஏற்க இயலாது என நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முகமட் தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் கொக்கெய்ன் என்ற போதைப்பொருளைக் கடத்திற்காக பினாங்கில் கிளேவ்டியா கைது செய்யப்பட போது அவர் கர்ப்பமாக இருந்தார்.

சிறையில் இருந்த போது இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தைக்கு 3 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker