Latestமலேசியா

மசீச தலைவர் தேர்தல்: வீ கா சியோங் வென்றார்!

கோலாலம்பூர், நவ.5- மசீச தேசியத் தலைவர் தேர்தலில் ஆயர் ஈத்தாம் எம்பியான டத்தோஶ்ரீ வீ கா சியோங் வெற்றி பெற்றார். ஒட்டு மொத்தமாக கட்சி த்தேர்தலில் அவரது அணியினர் முழுமையாக வாகைசூடினர்.

டத்தோஶ்ரீ வீ கா சியோங் 447 பேராளர் வாக்குகளைப் பெற்று வென்ற வேளையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கான் பிங் சியுவுக்கு 182 பேராளர் வாக்குகள் கிடைத்தன. அதே வேளையில், தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 3ஆவது வேட்பாளரான இங்கூ டெக் கியோங் என்பவருக்கு ஒரு பேராளர் வாக்குக் கூட கிடைக்கவில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் மசீச சார்பில் போட்டியிட்ட நாடாளுமன்ற வேட்பாளர்களில் வீ கா சியோங்கைத் தவிர இதர அனைவரும் தோல்வி கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மசீசவின் தேசிய துணைத் தலைவராக வீ கா சியோங் அணியைச் சேர்ந்த டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கட்சித்தேர்தலில் தம்முடைய வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட வீ கா சியோங், அடுத்து விரைவில் கட்சியின் மத்திய நிர்வாக குழுக் கூட்டத்தை தாம் நடத்தவிருப்பதாகவும் கட்சியை ஒன்றுபடுத்தி கட்சியை வலுப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker