Latestசினிமா

அதிர்ச்சி: சொன்னபடி ‘சர்கார்’ படத்தை வெளியிட்ட ‘தமிழ் ராக்கர்ஸ்’

சென்னை, நவ. 7- கள்ள விசிடி தளமான ‘தமிழ் ராக்கர்ஸ்’ தனது பக்கத்தில் ‘சர்கா’ர் படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் நடிப்பில் டி.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் தீபாவளிக்கு சர்கார் படம் வெளியானது.

விஜய் ரசிகர்கள் காலை முதல் காட்சியில் இருந்து படத்தை பார்த்து விட்டு கொண்டாடிக் கொண்டாடினார்கள். அந்தப் படம் குறித்து கலவையான விமரசனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் கள்ள விசிடி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டுள்ளது.

முதல் நாளே சர்கார் படத்தை தங்கள் பக்கத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் ஏற்கெனவே மிரட்டி இருந்தது.

முக்கியமாக விஜய் ரசிகர்கள் பொதுமக்கள் தமிழ் ராக்கர்ஸ் குழுவினரை பிடிக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்நிலையில் தான் சர்கார் படம் வெளியாகி 6 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது. இது சர்கார் படக்குழுவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்களும் படம் வெளியானதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker