Latestஇந்தியா

நடுவானில் பழுதான இண்டிகோ விமானம்: மரண அச்சத்தில் தவித்த பயணிகள்!

ஐதராபாத், நவ.7- ஆந்திரா மாநிலத்திலிருந்து 47 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போதே விமானத்தின் இயந்திரம் ஒன்று பழுதாகிவிட்டது.

அப்போது ஒரே இயந்திரத்தின் உதவியுடன் சென்னை விமானநிலயத்தில் விமானத்தைத் தரை இறக்குவது கடினம் என்பதால் விமானி தாமதிக்காமல் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விமானம் அவசரமாகத் தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். விமான நிலைய ஓடுபாதையைச் முற்றிலும் தீயணைப்பு வாகனம் மருத்துவ குழுவினர் என அனைவரும் தயாராக நிறத்தப்பட்டனர்.

அதையடுத்து சுமார் அரை மணிநேரம் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம் 6.30 மணியளவில் பத்திரமாகத் தரையிறங்கியது. அதில் பயணம் செய்த 47 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் அரை மணிநேரம் அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிகள் பலர் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இயந்திரம் போதுமான எரிபொருள் இல்லாததால் பழுதானதாகத் தெரிய வந்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker