Latestமலேசியா

“நான் திருடனா, கொள்ளையனா, வில்லனா? அல்லவே அல்ல!”-நஜிப்!

கோலாலம்பூர், நவ.7- சவுதி அரேபிய மன்னரிடம் இருந்து தமக்குக் கிடைத்த 260 கோடி ரிங்கிட் நன்கொடை தொடர்பாக தாம் பொய் சொல்லவில்லை என்று தம்முடைய முகநூல் நேரலை உரையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நஜிப் தமது முகநூல் நேரலையில் 11 நிமிட நேரம் அம்னோ உறுப்பினர்களுக்காகவும் மக்களுக்காகவும் உரையாற்றினார். அதில் ”நான் திருடனோ, கொள்ளையனோ அல்லது வில்லனோ அல்ல” என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் பல்வேறு வகையில் திரித்துக் கூறப்பட்டது. தேசிய முன்னணியை தோற்கடிக்க இதுவும் ஒரு காரணம் என்கிற அளவில் முழுமையாக இந்த விவகாரம் பயன்படுத்தப்பட்டது என்றார் அவர்.

இந்தப் பணத்தை சவுதி மன்னர் அப்துல்லா அஸீஸ் நன்கொடையாக வழங்கினார் என்றும் அவருக்கும் தமக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது என்றும் நஜிப் தமது உரையில் கூறினார்.

தேசிய முன்னணி தொடர்ந்து ஆட்சியில் நீட்டிக்க, நிதி ரீதியில் தமக்கு உதவ வேண்டும் என்று சவுதி மன்னர் கருதினார். தமக்கு கிடைத்த 260 கோடி ரிங்கிட்டும் பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த நிதியைப் பெற்றது மற்றும் திருப்பி அனுப்பியது ஆகிய அனைத்தும் பேங்க் நெகாராவுக்கும் அதன் அதிகாரிகள் சிலருக்கும் தெரியும் என்று நஜிப் சொன்னார்.

இவ்வாறு கிடைத்த நிதி எதனையும் தாம் சொந்த இலாபத்திற்காக பயன்படுத்தியது கிடையாது. அரசியல் விவகாரங்களுக்கும் அரசு சாரா அமைப்புக்களுக்கும் மக்களின் நலனுக்காகவுமே தாம் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

”அரசாங்கத்தில் நீண்ட காலம் இருந்து மக்களுக்காக சேவை ஆற்றியுள்ளேன். என்னால் முடிந்த வரை சிறப்பாக சேவையாற்றி உள்ளேன். நான் பெற்ற நன்கொடைகள் குறித்து விளக்குவதற்காகவே இந்த முயற்சிகளை மேற்கொள்கிறேன். நான் திருடனோ, கொள்ளையனோ அல்லது வில்லனோ அல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று முகநூல் நேரலை உரையில் நஜிப் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker