Latestமலேசியா

பேங்க் நெகாரா நில விவகாரம்: முன்னாள் ஆளுனரிடம் விசாரணை!

கோலாலம்பூர், நவ.7- கடந்த ஜனவரியில் நிதியமைச்சிடமிருந்து 200 கோடி ரிங்கி மதிப்புடைய நிலத்தை பேங்க் நெகாரா வாங்கியது தொடர்பான சர்ச்சை குறித்து அதன் முன்னாள் ஆளுனர் டான்ஶ்ரீ முகம்மட் இப்ராகிடம் ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி விசாரணை நடத்தியது.

சுமார் 55.79 ஏக்கர் நிலத்தை நிதியமைச்சிடமிருந்து வாங்கியது தொடர்பில் பேங்க் நெகாராவைச் சேர்ந்த சில முக்கிய அதிகாரிகளும் விசாரிக்கப் பட்டதாக எம்ஏசிசி வட்டாரங்கள் கூறின. இவ்விவகாரம் தொடர்பில் டான்ஶ்ரீ முகம்மட் இப்ராகிம் பலமுறை விசாரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நில விற்பனை மூலம் கிடைத்த பணம் என்ன ஆனது என்பது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இந்த நில விற்பனை முறையாக நடந்துள்ளதா? என்பதை கண்டறிய இந்த விசாரணையை எம்ஏசிசி மேற்கொண்டுள்ளது.

அதேவேளையில் இந்த விவகாரத்தில் பேங்க் நெகாரா நடத்தும் சொந்தமான உள் விசாரணைகளில் எம்ஏசிசி குறுக்கிடாது என்று தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker