Latestஉலகம்

மைத்திரி- மகிந்தாவுடன் இரா.சம்பந்தன் தீபாவளி கொண்டாட்டமா?

கொழும்பு, நவ. 7- இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் நிச்சயமற்ற நிலையில், நடப்பு ஆட்சியாளர்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை தமிழர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிபர் மைத்திரி பாலசிரிசேனாவின் தலைமையில் நேற்று மாலை அதிபர் மாளிகையில் விஷேச தீபாவளி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தமிழர் கலாசாரத்திற்கு உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. இந்நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாநில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கருதப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தீபாவளி கொண்டாடியது அரசியல் பின்னணியை உள்நோக்கமாக கொண்டது எனக் கருதப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker