Latestஉலகம்

நிகழவே முடியாத அதிசயம்: பெருங்கடல் பகுதியில் 18 மாத குழந்தை! மீட்டார் மீனவர்!

வெலிங்டன், நவ.7- நிகழவே முடியாத அதிசயம் என வர்ணிக்கப்படும் நிகழ்வு இது. பெருங்கடல் ஒன்றிலிருந்து 18 மாத குழந்தையை மீட்டு இருக்கிறார் மீனவர் ஒருவர். இந்த சம்பவம் நியூசிலாந்து கடல் பகுதியில் நடந்துள்ளது,

நியூசிலாந்து வடக்கு தீவு ஒன்றுக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் ஒரு பொருள் மிதந்து வருவதை கண்டார் கஸ்ஹட் என்ற பெயரைக் கொண்ட அந்த மீனவர். முதலில் அதனை பொம்மை என கருதினார். பின்னர் தான் அது குழந்தை என அவருக்கு தெரிந்தது.

அதன் அருகே சென்று கைகளால் தூக்கும் வரை அது குழந்தை என்று எனக்கு தெரியாது என்கிறார் அவர். அவர் மென்மையாக சிணுங்கினான் அதன் பிறகே “இறைவா, இவன் உயிருடன் இருக்கிறான் என்று உணர்ந்தேன்” என்கிறார்.

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் வழக்கமாக கஸ்ஹட் மீன் படிக்கும் இடத்திற்கு செல்லவில்லை. வேறு இடத்திற்கு மீன் பிடிக்க சென்றார். அதனால் தான் அவரால் அன்று அக்குழந்தையை காப்பாற்ற முடிந்தது.

அந்தக் குழந்தை பெற்றோர்களிடமிருந்து தவறி விழுந்து பெருங்கடல் வரை வந்துவிட்டது. குழந்தை கடலிலிருந்து மீட்கப்பட்டது என்று தெரிந்தும் முதலில் அக்குழந்தையின் தாய் அச்சத்தில் கத்திக் கதறினார். பின்னர் தான் சமாதானமானார்.

அந்தக் கடற்கரை பகுதியில் உள்ள முர்பி ஹாலிடே கேம்பில் அக்குழந்தையின் பெற்றோர் தங்கி இருந்ததாக தெரிகிறது. அந்த ஹாலிடே கேம்பின் உரிமையைளர் இதனை நிகழவே முடியாத ஒரு சம்பவம் என விவரிக்கிறார். அந்தக் குழந்தை இப்போது நலமாக இருப்பதாக போலிசார் தெரிவித்ததாக பி.பி.சி. செய்தி ஒன்று தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker