Englishஉலகம்

அமெரிக்க தேர்தல்: அசத்தல் வெற்றி கண்ட தமிழர்!

வாஷிங்டன், நவ. 8- அமெரிக்காவில் நடந்த இடைத் தவணைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று இருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இந்தத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகியது. இத்தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் சரிவைச் சந்தித்தது.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தச் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இவர் இல்லினாய் தொகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த வந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா சென்றார். அங்குள்ள பிரின்ஸ்டன் மற்றும் ஹார்வார்டு பல்கலைக் கழகங்களில் இவர் கல்வி முடித்தார்.

இந்நிலையில் பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி, குடியரசு கட்சியை சேர்ந்த இந்தியரான ஜெடி- டிகன்கேரை 30% வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

அதேபோல் சென்னையில் பிறந்து வளர்ந்த கேரளாவைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் என்ற பெண்ணும் வாஷிங்டன் தொகுதியில் இருந்து பிரதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார்.

அத்துடன் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அமி பேரா மற்றும் ரோ கண்ணா ஆகியோரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 9 இந்தியர்கள் மாநில சபைகளுக்கும் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker