Latestசினிமா

அவளுடன் வாழ்ந்த அந்த 16 வருடங்கள்! -மனம் திறந்தார் அமீர்கான்

மும்பை, நவ. 8- நீண்ட 16 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த தான் ஒரு அதிஷ்டசாலி என தமது முதல் மனைவி குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் அமீர்கான்.

இந்தி திரையிலகில் நடிப்புக்கு மட்டுமல்ல, வசூல் வேட்டையிலும் எப்போதுமே முன் வரிசையில் இருப்பவர் நடிகர் அமீர்கான். திருமண வாழ்க்கை தொடர்பாகவும் விவகாரத்து குறித்தும் அமீர் கான் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

தமது இரண்டாவது திருமணம் மிகவும் கவலை நிறைந்த முடிவாக இருந்தது என மனம் திறந்த அமீர் கான், ரீனா தத்தாவுடனான 16 ஆண்டு காலத் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பாக உருக்கமாக பேசியுள்ளார்.

ரீனா தத்தாவை பிரிந்து செல்ல மேற்கொண்ட முடிவு தமக்கு மட்டுமல்ல, ரீனாவுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் மிகுந்த கவலையை அளித்தது என்றார் அமீர்.

ரீனாவுடன் விவாகரத்து பெற்றுக் கொண்டதால் அவர் மீது தனக்கிருக்கும் மதிப்போ அல்லது அவருடன் தமக்கிருக்கும் அன்போ குறைந்து விட்டதாகவோஅர்த்தமல்ல என்றார்.

ரீனா மிகவும் வியக்க வைக்கும் ஆளுமைக்கும் உரியவர் என தெரிவிக்கும் அமீர்கான் , 16 ஆண்டுகள் அவருடன் வாழ்க்கை நடத்தியது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றார்.

இளம் வயதிலேயே நாங்கள் திருமணம் செய்து கொண்டாலும் நாங்கள் இருவரும் எங்களது திருமண வாழ்க்கைக்கு அதற்கான முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்றார்.

1986 ஆம் ஆண்டு அமீர்கான் மற்றும் ரீனா தத்தா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2002ஆம் இண்டு இருவரும் விவகாரத்து பெற்றுள்ளனர்.

இத்திருமணத்தில் ஜுனைத் என்ற மகனும் -இறா என்று மகளும் உள்ளனர். 2005 ஆம் ஆண்டு அமீர் கான் -கிரண் ராவு என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker