Latestமலேசியா

இலவச காலை உணவு; அமைச்சர் மஸ்லியை கிண்டலடித்த நஜிப்!

கோலாலம்பூர், நவ.8- ஜப்பான் நாட்டில், வறுமை கோட்டில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி சிறார்களுக்கு, இலவச சத்துணவு வழங்கும் திட்டத்தை போன்று மலேசியாவின் பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பரிந்துரைத்தார்.

அவரின் அப்பரிந்துரையை, முன்னாள் பிரதமரான டத்தோஸ்ரீ நஜிப் கிண்டல் செய்துள்ளார். அவ்வாறான திட்டம், ஏற்கனவே பள்ளிகளில் அமலில் இருப்பதாகச் சுட்டிக் காட்டி, கல்வி அமைச்சின் நடவடிக்கைகளை முழுமையாக மஸ்லி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

ஜப்பான் நாட்டிற்கு, மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மஸ்லி மாலிக் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பொதுவாக, பயணங்களை மேற்கொள்ளும் போது, நம்மால் தெளிவாக சிந்திக்க முடியும் என்று சொல்வார்கள். அதனால் தான் மஸ்லீ அவ்வாறான பரிந்துரையை முன்வைத்துள்ளார். ஆனால், கடந்த 1979-ஆம் ஆண்டு முதற்கொண்டு, பள்ளிகளில் இந்த இலவச சத்துணவு திட்டம் அமலில் உள்ளது என்பதை அவர் அறிந்துக் கொள்ளவில்லை.

“பள்ளி மாணவர்களின் சீருடை நிறங்கள் குறித்து ஆர்வம் காட்டி வரும் மஸ்லி, இந்த இலவசச் சத்துணவுத் திட்டத்தை, பட்ஜெட் 2019-திலிருந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அகற்றி விட்டதை இதுவரை அறியவில்லை” என்று நஜிப் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த இலவச உணவுத் திட்டத்தை தேசிய முன்னணி அரசாங்கம் அமல்படுத்தியது. அந்தத் திட்டத்தின் கீழ், (வறுமையில் வாடும்) தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு ரிம.2.50- மற்றும் சபாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு ரிம.3.00- ஒதுக்கப் பட்டிருந்தது என்று நஜிப் விளக்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker