Latestஇந்தியா

‘தீபாவளிக்கு போனஸ் இல்லையா?’ – ஏர் இந்தியா ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

மும்பை, நவ.8- மும்பை அனைத்துலக விமானநிலையத்தில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள், தங்களுக்கு தீபாவளி போனஸ் தரப்படாததால் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக விமானப் பயணங்களில் கணிசமான தாமதம் ஏற்பட்டு வருவதாக உள்நாட்டு ஊகடங்களை மேற்கோள் காட்டி, பல வெளிநாட்டு செய்தி இந்நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் தீபாவளிக்கு முதல் இரவு தங்களது வேலைநிறுத்தத்தை தொடங்கியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக மும்பையில் விமான பயணங்கள் பல மணி நேரம் தாமதம் அடைகின்றன என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் பயணச் சிட்டைகளைப் பரிசோதித்தல் பயணிகளின் உடமைகளைக் கையாளுதல் உள்ளிட்ட பணிகளில் இந்த ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் நிலைமை சீர்செய்யும் பணியிலும் கால தாமதத்தை கணிசமாகக் குறைக்கும் பணியிலும் தாங்கள் ஈடு பட்டிருப்பதாக ஏர் இந்தியா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker