Latestமலேசியா

துன் மகாதீருக்கு தாய்லாந்து அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது!

பேங்காக்,நவ.8- பிரதமர் துன் மகாதீருக்கு தாய்லாந்தின் தேசிய மேம்பாட்டுக் கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.

நேற்றிரவு பேங்கோக்கில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியில் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் ஆனந்த் பஞ்சாராச்சுனிடம் இருந்து துன் மகாதீருக்கு பதிலாக வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் சுராய்டா கமாரூடின் அந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

துன் மகாதீர் தற்போது அலுவலாக ஜப்பான் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதினை நேரடியாக வந்து பெற்றுக் கொள்ள இயலாததால் துன் மகாதீர் வருத்தம் தெரிவித்துள்ளதாக சுராய்டா அந்நிகழ்ச்சியில் தெரியப்படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker