Latestமலேசியா

தேச நிந்தனை: காதீர் ஜாசினை விசாரிக்க வேண்டும்! –பெர்காசா

பாரிட், நவ.8- நாட்டின் சுல்தான்களை அவமதித்த குற்றத்திற்காக, பத்திரிகையாளர் காதீர் ஜாசின் மற்றும் கட்டுமானத் துறை கோடீஸ்வரர் கூன் இயூ இன் ஆகிய இருவரும், தேச நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று மலாய் உரிமை அமைப்பான பெர்காசா வலியுறுத்தியுள்ளது.

காதீர் மற்றும் கூன் ஆகிய இருவரும், தங்களின் வலைத்தளங்களில், அரச குடும்பங்களை அவமதிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இதனால் நாட்டின் அரசு முறை குறித்து மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்படக் கூடும் என்று பேரா மாநில பெர்காசா அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவுத் தலைவர் முகமட் சாஃபியான் சொன்னார்.

பொதுவாகவே, காதீர் தனது வலைத்தளங்களில், அரசக் குடும்பங்களுக்கு எதிரான வகையில் தான் தகவல்கள் வெளியிட்டு வருவார். அதன் வாயிலாக அரசு முறை அல்லது மன்னராட்சி முறைக்கு எதிராக அவர் மக்களை தூண்டி விடுகிறார் என்று முகமட் சாஃபியான் கூறினார்.

“இதனிடையில், மறைந்த முன்னாள் பேரா சுல்தான், சுல்தான் அஸ்லான் ஷா, ஊழல் நடைமுறைகளை செயல்படுத்தி, குறிப்பிட்ட சிலருக்கு விருதுகள் வழங்கி வந்தார் என்று கூன் இயூ தகவல் வெளியிட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

“பேரா மாநில பொருளாதார ஆலோசக மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தாம் வெளியேற்றப் பட்டதற்கு சுல்தான் நஸ்ரின் ஷா தான் காரணம் என்றும் கூன் கூறியுள்ளார்” என்று முகமட் சுட்டிக் காட்டினார்.

“நமது சுல்தான்களின் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் கண்ணியம் குறித்து கேள்வி எழுப்புவர்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அவர் ஆவேசமாக கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker