Latestவிளையாட்டு

“நான் மீண்டும் வருவேன்!” -லீ சோங் வெய்

கோலாலம்பூர், நவ.8- “பேட்மிண்டன் களத்திற்கு நான் மீண்டும் வருவேன். ஆட்டத்தை தொடங்குவேன். ஆனால், போட்டிக் களத்திற்கு திரும்பும் முன்னர் போதுமான கால அவகாசத்தை எடுத்துக் கொள்வேன்’ என்று நாட்டின் தலைசிறந்த பேட்மிண்டன் வீரரான டத்தோ லீ சோங் வெய் அறிவித்துள்ளார்.

தம்முடைய எதிர்காலம் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் ஆகியவை குறித்து இன்று செய்தியாளர்களிடம் லீ சோங் வெய் விளக்கினார்.

மூக்கில் ஏற்பட்டுள்ள தொடக்கநிலை புற்றுநோய்க்கு தைவானில் சிகிச்சை பெற்ற 36 வயதுடைய லீ சோங் வெய் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற தனது ஆசை, இன்னமும் மங்கிப் போய்விடவில்லை என்று தெளிவுப் படுத்தினார்.

இப்போதே தாம் சற்று மிதமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இன்னும் சிறிது காலத்தில் தாம் போட்டிக் களத்திற்கு திரும்பவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“நான் ஏன் இன்னமும் ஓய்வு பெற விரும்பாமல் இருக்கிறேன் என்றால் அந்த அளவுக்கு நான் பேட்மிண்டனை நேசிக்கிறேன். நான் போட்டிக் களத்திற்கு திரும்ப நான் எனக்கு தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொள்வேன். மேலும் நான் என்னுடைய டாக்டர் பச்சைக் கொடி காட்ட வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்” என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker