Latestஉலகம்

பணியாளர்களை சிறுநீர் குடிக்க வைத்த 3 நிர்வாகிகள் கைது!

 

பெய்ஜிங்,நவ.8- நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை அடையாததால் தங்களின் பணியாளர்களை சிறுநீரை குடிக்கவும், கரப்பான் பூச்சிகளை சாப்பிடவும் வைத்த நிறுவனம் ஒன்றின் நிர்வாகிகள் மூவருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குய்சோவ் நகரில் உள்ள அந்நிறுவன பணியாளர்களை இடைவாரால் அடித்தது மட்டுமின்றி சிறுநீரை குடிக்க வற்புறுத்திய காணொளி “வெய்போ” என்ற சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு நல்ல அடைவுநிலையைப் பெறாத பணியாளர்களை அந்த நிர்வாகிகள் ஏற்கெனவே கழிவறை தண்ணீரை குடிக்க வைத்திருக்கிறார்கள்; அவர்களின் தலை முடியை மொட்டை அடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக தனது பணியாளர்களுக்கு சம்பளமே வழங்கவில்லையாம். ஆனால், எந்தப் பணியாளரும் அதை எதிர்த்து கேள்வி கேட்டவில்லையாம்.

கேள்வி கேட்டால் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் அவர்கள் அமைதி காத்திருக்கிறார்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker