Latestமலேசியா

பெட்ரோல் நிலையத்தில் பெண்ணிடம் கத்தி முனையில் கொள்ளை! (video)

குவாந்தான்,நவ.8- ஜாலான் பிந்தாசான் குவாந்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்த இளம்பெண்ணிடம் பாரங் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.

அதிகாலை மாலை 1.20 மணிக்கு காருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு காருக்குள் ஏறும் சமயத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட 21 வயது பெண் கூறியதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நோர் யூசோப் அலி தெரிவித்தார்.

கேபேங்கில் வேலை செய்யும் அந்தப் பெண் வேலை முடிந்த பிறகு தனது நண்பரை சந்தித்து விட்டு பாலோக்கிலுள்ள வீட்டுக்குச் செல்லும் போது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பெரோடுவா விவோ காரில் வந்த ஒருவன் காரை வழி மறித்து பாராங் கத்தியை நீட்டி அந்தப் பெண்ணின் ஐபோன் 8 பிளசை கொள்ளையடித்திருக்கிறான்.

அந்த பெட்ரோல் நிலையத்தின் சிசிடிவி ரகசிய கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சியில் ஒரு வாட்டசாட்டமான ஆடவன் கறுப்பு மேல் அங்கி அணிந்தும் முகமூடி அணிந்து அந்தப் பெண்ணை கத்தி வைத்து மிரட்டுவது பதிவாகியுள்ளது. மாறாக, மற்றோர் ஆடவன் காரிலேயே காத்திருந்த காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

அவ்விரு ஆடவர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதே சமயம், இரவு நேரத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

08/11/2018#KUANTAN#PAHANGKejadian samun petron bypass hala ke gebeng… Kejadian lebih kurang 1 pagi… hati2 semua. Jenayah ada di mana2.

Posted by Zeran Seran on Wednesday, 7 November 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker